சாமுண்டி தேவி


முதல் நாள் : சக்தி தேவியை முதல் நாளில் சாமுண்டியாக கருதி வழிப்பட வேண்டும். தெத்துப்பல் திருவாயும் , முண்ட மாலையும் அணிந்து காட்சி தருவாள் அன்னை .முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் அன்னையை சாமுண்டா எனவும் அழைப்பார்கள். கோபம் கொண்டவர்களாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோவம் மற்றவர்களை திருத்தி நல்வழியில் நடக்க வைப்பதற்கு தானே தவிர நல்லவர்களை தண்டிப்பதற்கு அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள் . இந்திய தினத்தில் அன்னையை சாமுண்டியாக அலங்கரித்து அன்னைக்கு சகல பூஜைகளும் செய்து வழிப்பட வேண்டும். அப்போது அம்மனுக்கு பிடித்த நைவேத்தியம் சர்க்கரை பொங்கலை பூஜையில் வைத்து வழிப்பட வேண்டும். பின்னர் பூஜை முடிந்த பிறகு அங்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை வழங்கினால் உங்களுக்கு உள்ள எதிரிகளின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் வழிபாடு மேற்கொள்ளும் போது எஞ்சிய நாட்களும் தடையில்லாமல் பூஜை நிறைவேற வேண்டும் என மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.