கௌமாரி தேவி


ஆறாம் நாள் : ஆறாம் நாளில் அன்னையை கௌமாரி தேவியாக கருதி வழிபடவேண்டும். கௌமாரி தேவி மயில் வாகனமும் சேவல் கொடியும் கையில் ஏந்தியிருப்பாள். தேவசேனாதிபதியான முருக பெருமானின் வீரத்திற்கு அடிப்படை காரணமாக விளங்குபவள் அன்னையே! ஓம்கார சொரூபமானவள், சகல பாவங்களையும் போக்கி அனைவருக்கும் நன்மையை அளிக்ககூடியவள் அன்னையே! வீரத்திற்கு அடிப்படையானவள் நமது அன்னை. அன்னைக்கு இன்று தேங்காய் சாதம் வைத்து வழிப்பட அனைத்து நன்மைகளும் கிடைக்க பெரும் என குறிப்பிடப்படுகிறது. அன்னையை இந்நாளில் வேண்டுபவர்களுக்கு வீரம் கிடைக்கபெறும் என்று குறிப்பிடப்படுகிறது.