இந்திராணி தேவி


மூன்றாம் நாள் : மூன்றாம் நாள் சக்தி தேவியை, இந்திராணி தேவியாக பாவித்து வழிப்பட வேண்டும். அம்மனை மகேந்தரி, சாம்ராஜதாயினி போன்ற பல பெயர்களில் அழைப்பார்கள். அன்னை இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் தாங்கியவள் நமது அன்னை. ஆயிரம் கண்ணுடையவள் , யானை வாகனம் உடையவள் என்று வழங்கப்படுகிறார். விருத்திகாசுரன் என்னும் அசுரனை அன்னை வதம் செய்தால் என்று குறிப்பிடப்படுகிறது. தேவலோகத்தை அலங்கரிப்பவள் அன்னையே ஆவாள். பெரிய பெரிய பதவியை அடைய வேண்டும் என் எண்ணுபவர்களும், உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என நினைப்பவர்களும் கூட இந்த தினத்தில் அன்னையை மனதார வழிபடும் போது நிறைவேறும் என குறிப்பிடப்படுகிறது. மேலும் வேலை இல்லாதவருக்கு வேலை கிடைக்கவும் , பதவி உயர்வு கிடைக்கவும் சம்பள உயர்வு கிடைக்க அருள்பவலும் அன்னையே! இந்த நாளில் அம்மனுக்கு நைவேத்தியம் வெண்பொங்கல் வைத்து வணங்கி வர நம்மை பிடித்த பீடைகள் யாவும் நீங்கி நல்வாழ்வு வாழலாம் என குறிப்பிடுகிறார்கள்.