மகேஸ்வரி தேவி


ஐந்தாம் நாள் : ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். பிறைச்சந்திரன்,பாம்பு , திரிசூலம் அணிந்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள் நமது அன்னை. யாராலும் அளக்க முடியாத பெரிய சரீரம் கொடிருப்பவள் நமது அன்னை. சர்வ மங்களமும் தந்து தனது பக்தர்களை காத்தருள்வாள். தர்மத்தின் திருவுருவமாக இருந்து தர்மம் அழியும் சூழ்நிலை வரும் போது எல்லாம் அதனை காத்து வருபவளும் அன்னையே. அன்னையை வழிபட்டால் தான் உழைத்த உழைப்புக்கான முழு பலனும் வந்து சேருமாம். இந்த நாளில் அன்னைக்கு புளியோதரை படைத்து வழிபடுதல் மிகவும் நலம் பயக்கும். மேலும் தீராத விரோதம் தீரவும், கோழையாக இருப்பவர் தைரியம் பெறவும் அன்னையை இன்று வழிபடுதல் அவசியமாகிறது.