துளசி கல்யாணம்


துளசி கல்யாணம்: திருமண தடை உள்ளவர்கள் செய்யவேண்டிய துளசி கல்யாணத்தை பற்றி தான் காண இருக்கிறோம். இந்த பூஜையை திருமணமாகதவர்கள் செய்தால் திருமணம் ஆகும், திருமணம் ஆனவர்கள் செய்தால் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.

பூஜை முறை: இது கார்த்திகை மாதம் வருகின்ற முதல் துவாதிசி அன்று செய்யவேண்டும் இதை உத்வான துவாதிசி என்று அழைப்பார்கள். ஸ்ரீ துளசி கொண்டு பூஜை செய்யவேண்டும் அதனால் எந்த துளசியை பூஜைக்கு பயன்படுத்த போகிறோமோ அதற்க்கு காலையிலும் மாலையிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூஜையை மாலையில் தான் செய்ய வேண்டும். முதலில் துளசியை வேரோடு பறித்து கொள்ள வேண்டும், அதை ஒரு பாத்திரத்தில் மண்ணை நிரப்பி அதில் நட்டுவிட வேண்டும். அதற்கும் நீர் ஊற்ற வேண்டும், பின்னர் அதற்க்கு மஞ்சள் குங்குமம் வைத்து நெல்லி இலை மற்றும் மாவிலை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

வீட்டின் நடுவிலோ, பூஜை அறையிலோ ஒரு மனை அமைத்து அதில் ரங்கோலி கோலம் போட வேண்டும். அதற்க்கு முன் பெரு நெல்லிக்காயை 5 எடுத்து கொண்டு அதன் அடிப்பகுதியை சிறிது நறுக்கி கொள்ள வேண்டும், பின்னர் ஒரு கிருஷ்ணர் படமோ அல்லது சிலையோ இருந்தால் அதை சுத்தப்படுத்தி மனையில் வைக்க வேண்டும், பின் துளசி செடியை அலங்கரித்து கிருஷ்ணர் அருகில் வைக்க வேண்டும். நெல்லிக்காயில் விளக்கு போட்டு அந்த மனையை சுற்றி வைத்த பின்னர் அகல் விளக்குகளையும் மனையை சுற்றி வைக்க வேண்டும். இப்பொது மாங்கல்ய தாரணம் செய்ய வேண்டும், அதாவது யாருக்கு கல்யாணம் ஆகவேண்டுமோ அவர்கள் மஞ்சள் கயிறில் மஞ்சளை கட்டி தாலி போல் செய்து கிருஷ்ணர் கையில் வைத்து பின் அதை துளசி அம்மனுக்கு அணிவிக்க வேண்டும், அதன் போது துளசி ஸ்லோகம் சொல்வது சிறப்பு. அம்மனுக்கு நெய்வேத்தியமாக ரவலட்டு செய்து படைக்க வேண்டும். பின்னர் தூப தீபம் காட்டி பூஜையை நிறைவு செய்யலாம். இதை செய்பவருக்கு ஒரு வருடத்திற்குள் திருமணம் ஆகும் என்பது நம்பிக்கை.