வைஷ்ணவி தேவி


நான்காம் நாள் : நான்காம் நாள் அன்னையை வைஷ்ணவி தேவியாக வழிப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. இன்று அம்மனுக்கு அலங்காரம் செய்து நைவேத்தியமாக எலுமிச்சை சாதம் செய்து படையலிட அனைத்து நலனும் பெறுவார்கள். அம்மன் சங்கு சக்கரம், கதை , வில் ஆகியவற்றை தாங்கி கருட வாகனத்தில் காட்சி தருகிறாள். அதனால் இன்று அலங்காரம் இதே போல் செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாக இருக்கும்.
தீயவற்றை எல்லாம் அழிப்பவள் அன்னையே! இவ்வளவு சிறப்பு மிக்க அன்னையை இன்று வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நீண்ட வாழ்க்கை வாழ்வார்கள்.