வராகி தேவி


இரண்டாம் நாள் : நவராத்திரியின் இரண்டாம் நாளில் அம்மனை வராகி தேவியாக அலங்கரித்து வழிபடவேண்டும். வராகி என்பதன் பொருள் பன்றி என்பதாகும். வராகி அம்மன் பன்றி முகமும் தெத்து பற்களும் கொண்டிருப்பாள் என குறிப்பிடப்படுகிறது. அம்மன் கொண்டுள்ள ஆயுதாங்கலாக சூலமும் உலக்கையும் குறிப்பிடப்படுகிறது. மேலும் அம்மன் பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பார் என குறிப்பிடுகிறார்கள். தனது தெத்து பற்களால் பூமியை தான்கியிருப்பவலும் அன்னையே. அம்மனுக்கு மங்கலமய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும். வராகி அம்மன் அன்னையின் சேனாதிபதியாவாள் . ஏவல்,பில்லி, சூனியம் எதிரிகள் தொல்லைகளிலிருந்து காப்பவள் வராகி அம்மனே . இரண்டாம் நாளில் வராகி அம்மனுக்கு நைவேத்தியம் தயிர் சாதத்தை வைத்து வணங்கி வர நம்மை பிடித்த பீடைகள் யாவும் நீங்கி நல்வாழ்வு வாழலாம் என குறிப்பிடுகிறார்கள் .