Prev Next  
S.NO & VEGETABLE NAME USES
1. தக்காளி வைட்டமின் ஏ ,சி, கே, இரும்புசத்து , பொட்டாசியம் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. ஆல்பா -டோமாட்டின் என்ற சத்து வயறு, நுரையீரல்,மார்பக புற்று நோய்களை தடுக்கும் .லைகோபீன் இதய நோய்களை தடுக்கும் ரத்தத்தை சுத்தீகரிக்கும் .பார்வை திறனை அதிகரிக்கும் .உடல் எடை குறைக்க உதவும் .ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும் .பித்தப்பை கற்கள் உருவாதை தடுக்கும் .ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .இயற்கையான ஆன்டி செப்டிக் இது .சருமம் அழகு ஆடிய உதவும் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் .
2. முள்ளங்கி சிறுநீரக தொற்றை சரி செய்யும் ,உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் ,மூல நோயை சரிசெய்யும் , புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ,கெட்ட கொழுப்பை கரைக்கும் ,நீர்ச்சத்தை உடலில் அதிகப்படுத்தும் .மூட்டு வலி வீக்கத்தை குறைக்கும், பற்களுக்கு நல்லது .மஞ்சள்காமாலையை சரிசெய்யும் இயல்புடையது ,மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி,குடலை சுத்தம் செய்யும். ஆஸ்துமா,சுவாச பிரச்னைகள்,தொண்டை எரிச்சல்,தொற்று ,அலர்ஜி சரியாகும் .புகைப்பிடிப்பதால் பாதித்த நுரையீரலை சரி செய்ய உதவும் .எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
3. பாகற்காய் ரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கும்,மூப்படுதலை தாமதப்படுத்த்த்தும் , முழங்கால் வலியை குறைக்கும், கல்லீரலை பலப்படுத்தும் ,இதய நோய் இளநரை வராமல் தடுக்கும். புற்று நோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்,சுவாச பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும் ,தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கும் ,பீட்டா கரோட்டின் பார்வை திறனை அதிகரிக்கும் ,மூல நோயிலிருந்து காக்கும் ,வயிற்று புழுக்களை நீக்கி ரத்தத்தை சுத்தீகரிக்கும்.
4. காளான் எலும்பு வளர்ச்சிக்கும் ,சிறுநீரகத்துக்கு நல்லது .அசைவத்தில் உலா சத்துக்கள் யாவும் இதில் உள்ளது ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ,உடல் எடையை குறைக்கும் .இதய நோய் ,ரத்தசோகை வராமல் தடுக்கும் ,நரம்பு மண்டலத்தை ஆரோக்கியம் ஆக்கும் .மூட்டு தொடர்பான பிரச்னை வராமல் தடுக்கும் . மார்பக புற்று வராமல் தடுக்கும் ,ஈஸ்ட்ரோஜென் சுரப்பை சீராக்கும் ,சிறந்த மலமிளக்கியாக செயல்படும் .
5. கேரட் வைட்டமின் ஏ ,சி ,கே ,பி௮,இரும்புசத்து ,தாமிரம் ,பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளது . பார்வை திறன் அதிகரிக்கும் .கொழுப்பை கரைக்கும் கல்லீரல் ,சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் , எலும்பு பற்களுக்கு நல்லது . சரும பொலிவை ஏற்படுத்தும் . வயிற்று புண்களை குணமாக்கும் ,செரிமான சக்தியை அதிகப்படுத்தும் .நுரையீரல் ,பெருங்குடல் ,வயிறு தொடர்பான புற்றுநோய்களை ஏற்படுத்தும்,ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தும்.
6. வெங்காயம் பற்சிதைவை போக்கும் ,சிறுநீரக கோளாறு வராமல் தடுக்கும் ,கெட்ட கொழுப்பை குறைக்கும் ,வறண்ட தொண்டை,இருமலை சரிசெய்யும் . எலும்பு மெலிதலை தடுக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.ரத்தசோகையை குணமாக்கும்.தசைகளுக்கு புத்துணர்வு அளிக்கும்.மாதவிலக்கை சீராக்கும் .வெங்காயத்தில் உள்ள குரோமியம் ,ரத்தத்தை சுத்தீகரிக்க உதவும் .கந்தகம்,தோல் நோயை தடுக்கும் .காஸ்ட்ரிக் அல்சர் வராமல் காக்கும்.ஆன்டி செப்டிக்,ஆன்டி பயாடிக் ,ஆன்டி மைக்ரோபைல் கொண்டிருப்பதால் தொற்றுகள் வராமல் தடுக்கும் .
7. பரங்கிக்காய் கிட்டப்பார்வை,தூரப்பார்வையை சரிசெய்யும் ,புற்று நோய் வரும் வாய்ப்புகளை குறைக்கும் .உடல் எடை அதிகரிக்க உதவும் .தசைகள் வலுவாகும் .உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்,பொலிவான சருமம் கிடைக்கும் ,இதய நோய்களை தடுக்கும் ,நல்ல உறக்கத்தை தரும் .கர்பிணிகள் சாப்பிட்டு வர,கருவுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் .உடல் எடை அதிகரிக்க இதை சாப்பிடலாம் .இனப்பெருக்கு உறுப்புகளுக்கு நன்மையை செய்யும்.
8. உருளைக்கிழங்கு வைட்டமின் சி ,பி காம்பிளாஸ் இருப்பதால் சருமத்திற்கு நல்லது . கால்சியம்,மாங்கனீசு நிறைந்துள்ளது .தீக்காயத்தை சரி செய்யும் .மாவு சத்து உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கும் ,மூட்டு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் .மூளை வளர்ச்சிக்கு உதவும்,மூளை செல்களை புத்துயிர் பெற செய்யும் .புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கும் . அதிகமாக விற்பவர்கள் சாப்பிடலாம்.உதடு வெடிப்பு ,ரத்தம் கசியும் ஈறுகள் ,வைரல் தொற்று ,இஸ்கர்வி நோய்களை சரி செய்யும் .
9. சேப்பக்கிழங்கு வைட்டமின் ஏ ,இ இருப்பதால் சருமம் ,சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்கு நல்லது .பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது .நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை அதிகரிக்கும் .மூப்பினால் ஏற்படும் கண்பார்வை இழப்பை தடுக்கும் ,தசைகள்,எலும்புகளை வலுப்படுத்தும் .சரும புண்கள் ,காயங்கள் ,சரும தொல்லைகள் தீர இதை சாப்பிடலாம் .வாய் மற்றும் நுரையீரல் புற்று நோய்களை தடுக்கும் .இதய நோய் வராமல் தடுக்கும் .
10. பீட்ரூட் நார்சத்து ,மாங்கனீஸ்,பொட்டாசீயம் ,வைட்டமின் சி நிறைந்துள்ளது . மூளையை சுறுசுறுப்பாக்கும் ,ரத்தசோகையை சரியாக்கும் .கெட்ட கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தீகரிக்கும்.மூப்படைத்தலை தாமதப்படுத்தும் ,செரிமானத்தை சரியாக்கும் .இதய நோய் வராமல் தடுக்கும் .கணையம்,மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் .மராத்தி நோயை தடுக்கும் .
11. வெண்டைக்காய் போலிக் அமிலம் நிறைவாக இருப்பதால் கர்பிணிகள் சாப்பிடலாம்.உடல் எடையை குறைத்து ரத்த சோகையை தடுக்கும் .பார்வை திறன்நோ ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .வயிறு தொடர்பான புற்று நோய்களை தடுக்கும் .நார்சத்து இருப்பதால்,மலச்சிக்கலை சரிசெய்யும் .ஆஸ்துமாவின் வீரியத்தை குறைக்கும் .சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைக்கும் .
12. வாழைப்பூ இரும்புசத்து இருப்பதால் ரத்தசோகை ,அல்சர் பிரச்சனையை சரிசெய்யும்.மலச்சிக்கலை தீர்க்கும் .உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் ,சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்,கர்பப்பை ஆரோக்கியமாகும் ,மாதவிடாய் பிரச்சனை சரியாகவும்.பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டு வர பால் அதிகமாக சுரக்க உதவும் .கர்ப்பிணிகள் வாரம் இரு முறை சாப்பிட்டு வர தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.சுவாசப்பாதை சீராகும் .சர்க்கரை நோய்க்கு நல்லது .
13. காலிபிளவர் கொலைன் சத்து இருப்பதால் ,மூளை வளர்ச்சிக்கு உதவும் ,தேவையான வைட்டமின் சி உள்ளது .உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் .செரிமானபாதையை சீராக்கும் .வயிற்று உபாதைகளை சரிசெய்யும் .தசை வளர்ச்சிக்கு உதவுகிறது .நினைவு திறனை அதிகரிக்கிறது .புற்று நோய் செல்களை அழிக்கிறது.சிறு கட்டிகளை அழிக்கிறது.
14. முருங்கைக்காய் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் , வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகரிக்கும்.ரத்தத்தை சுத்தீகரிக்கும் ,சரும பிரச்சனையை சரி செய்யும் வறண்ட தொண்டையை சரிசெய்யும் .கால்சியம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் ஆண்மையை பெருக்கும்.சர்க்கரை நோயை கட்டுப்படுத்திடும் .நுரையீரல் பிரச்சனையை சரிசெய்யும் .கர்ப்பிணிக்கு நல்லது .குழந்தையின்மை ,இனப்பெருக்க குறைபாடுகளை குமாக்கும் வாய்ப்புகள் அதிகம் .தொற்றுகள் உருவாவதற்கு தடுக்கும் .
15. பச்சை பட்டாணி வைட்டமின் சி,பி,கே அதிகமுள்ளது ,கால்சியம் ,புரதம் ,நார்ச்சத்துக்கள் உள்ளது .வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும் .மறதி வராமல் தடுக்கும் .இதயத்தை பாதுகாக்கும் ,ஆற்றல் கொடுக்கும் .ரத்த சர்க்கரை அளவை சமன் செய்யும் .லுடீன் சத்து உள்ளதால் கண் ஆரோக்கியம் மேம்படும் .ஆறுமாத குழந்தைக்கு முதல் திட உணவாக தரலாம் .செரிமானம் மேம்படும் .
16. நூல்கோல் வைட்டமின் ஏ ,சி ,இ பீட்டா கரோட்டின் நார்சத்து ,கால்சியம் ,மாங்கனீசு ,பொட்டாசியம் உள்ளிட்ட தாதுப்புகள் நிறைந்துள்ளது .மாரடைப்பை தடுக்கும் ,புற்று நோய் கட்டிகள் உருவாவதை தடுக்கும் .நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திடும் .செரிமானத்தை தூண்டிடும் .எலும்பு வளர்ச்சிக்கு நல்லது ,உடல் துர்நாற்றத்தை குறைக்கும் ,ஆஸ்துமா பிரச்சனையை குறைக்கும் .
17. முட்டைகோஸ் உடல் எடையை குறைக்கும் ,வைட்டமின் பி 6 ,சி ,கே அதிகமுள்ளது .பார்வைத்திறனை அதிகப்படுத்தும் .ஆன்டி ஆக்சிடன் இருப்பதால் புற்று நோய் வராமல் தடுக்கும் .மூட்டு வலியை தடுக்கும் .செரிமான உறுப்புகளை சரிசெய்து அல்சர் வராமல் காக்கும் .சல்பர் இருப்பதால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் .ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் .
18. குடமிளகாய் வைட்டமின் ஏ ,பி 6 ,சி ,கே நார்சத்து நிறைந்துள்ளது .மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் .சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் .மூப்படைத்தலை தாமதப்படுத்தும் .சரும ஆரோக்கியத்தை கூட்டும் .மன அழுத்தம் ,இதய நோய் வராமல் தடுக்கும் .நரம்பு தொடர்பாக ஏற்படும் வலி சரியாகும் .இரைப்பை தொடர்பான பிரச்னை குறையும்
19. கத்திரிக்காய் டைப் 2 சர்க்கரை நோயை தடுக்கும்,நினைவு திறனை அதிகரிக்கும் .இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் கிளுப்பை கரைக்கும் ,புற்று ,இதய நோய்வ ராமல் தடுக்கும் .இரும்பு சத்தை சமன்படுத்தும் .மூளை செல்களை பாதுகாக்கும் .இதில் உள்ள நீர்சத்து,சருமத்தை மென்மையாக்கும் ,முதல் கட்ட சிறுநீரக கற்களை கரைக்கும் .உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மன அமைதியை தரும் .ஜீரண சக்தியை மேம்படுத்தும் .
20. பூண்டு ரத்த சக்கரையை கட்டுப்படுத்தும் ,எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ,எலும்புகளை உறுதியாக்கும் ,மறதியை குறைக்க உதவும்.குடலில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கும் .கெட்ட கொழுப்பை தடுக்கும் .உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.பல் வலியை குறைக்கும் ,டான்சில்ஸ் பிரச்சனையை குணமாக்கும் .கபம் வாதம் போன்றவை அதிகரிக்கும் போது பூண்டு சாப்பிடுவது நல்லது.பூண்டு சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும் .குரல் வளம் பெருகும் .பார்வை தெளிவாகும் .ரத்த குழாய் அடைப்பை சாரி செய்யும் .