கருவறை

கருவறை

ஆன்மா தன்னுணர்தல் பயணம்

— அகஸ்திய தாமரைச்செல்வி

அகஸ்திய தாமரைச்செல்வி அம்மா தன் ஆன்மாவைப் பற்றியும் ஆன்மீகத்தைப் பற்றியும் தனது நீண்ட கால ஆய்வுகளின் பயனாக உருவானது தான் இந்த கருவறை.

தன்னுள்ளே தான் உணர்ந்த பிரபஞ்ச பேராற்றலை கருவறை ஆன்மாவின் தன்னுணர்தல் பயணம் மூலமாக ஒவ்வொரு ஆன்மாவும் தன்னை தான் உணர்ந்து இப்பூவுலகில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டும் ஒரு அற்புதமான வாழ்வியல் கலையாகும்.

தன்னை அறிதல்

கருவறை ஆன்மா தன்னுணர்தல் பயணத்தில் ஒருவர் பயணிக்கும் போது, "தான் யார்" என்ற உயர்ந்த ஆன்ம ஞானத்தையும், சுய இயல்பையும், தனக்குள் இருக்கும் பிரபஞ்ச பேராற்றலையும் உணர முடியும்.

✦✦✦

திறவுகோல்

இதில் கற்பிக்கப்படும் உயர்ந்த அதிர்வெண் கொண்ட மகா பீஜ மந்திரங்கள், முத்திரைகள் உடலை சீர்செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி ஆன்மாவை இயக்கும் திறவுகோலாக கருவறை செயல்படுகிறது.

✦✦✦

பிறப்பின் நோக்கம் அறிதல்

ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக அமைந்து, ஆன்மாவின் பிறப்பின் நோக்கத்தை அறிவதற்கும் ஆன்மீக விழிப்புணர்வு பெற்று பிரபஞ்ச பேராற்றலை ஆன்மா தன்னுள்ளே உணருவதற்கும் கருவறை வழிகாட்டுகிறது.

✦✦✦

நற்பண்புகள் மேலோங்குதல்

உடலின் உயிர் ஆற்றல் மையங்களை நேர்படுத்தி, மனதில் எழும் சிந்தனைகளை சீர்படுத்தி ஒருவரிடம் நற்பண்புகளை வளர்த்து வாழும் கலையை கருவறை கற்றுத்தருகிறது.